தமிழ்நாடு அரசுடன் மோதும் ஆளுநர்!

Advertisements

சென்னை:

அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மோதலில் ஈடுபட்டுள்ளார்.

அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அரசின் அறிவிக்கையை திரும்பப் பெற ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆளுநர் பரிந்துரைத்திருந்த குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி பெயர் இடம்பெற்றிருந்தது.

பல்கலைக்கழக மானியக் குழு தலைவரின் பிரதிநிதி பெயர் தமிழ்நாடு அரசின் அறிவிக்கையில் இடம்பெறவில்லை.

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறத் தேவையில்லை என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.

யுஜிசி தலைவர் பிரநிநிதி பெயர் இடம்பெறாததால் அரசின் அறிவிக்கையை திரும்பப் பெறுமாறு ஆளுநர் கோரியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *