விமான விபத்தில் 11ஏ இருக்கையில் இருந்த விஷ்வாஸ் குமார் என்ற இளைஞர் மட்டும் உயிர் தப்பினார்

ஆமதாபாத் விமான விபத்தில் 11ஏ இருக்கையில் இருந்த விஷ்வாஸ் குமார் என்ற இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து ஏா் இந்தியா விமானம், லண்டனுக்கு புறப்பட்டு சென்றது. வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் புறப்பட்ட அந்த விமானம், சில நிமிடங்களிலேயே, மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி தீ பிடித்து எரிந்தது.. விமானத்தில் 2 விமானிகள் உள்பட 12 ஊழியா்கள் மற்றும் 230 பயணிகள் பயணித்தனர்.
விபத்து நடந்ததை அடுத்து, முழு வீச்சில் மீட்புப் பணி நடைபெற்றது.இந்நிலையில் விமானத்தில் பயணித்த ஒரேயொருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்து விட்டதாக ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது. விமானத்தில் 11ஏ இருக்கையில் அமர்ந்து இருந்த விஷ்வாஸ்குமாா் ரமேஷ் என்பவா், மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். மேலும் இந்த விபத்தில்  குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் உயிரிழந்து இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *