தமிழக அரசின் திட்டகுழு ஆய்வு அறிக்கையை கண்டித்து,தமிழக விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Advertisements
தமிழக அரசின் திட்டகுழு ஆய்வு அறிக்கையை கண்டித்து, ஆரணயில், கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் ஒன்றினைந்து, தமிழக அரசின் திட்டகுழு ஆய்வு அறிக்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்ற வேளாண் கண்காட்சியில் மாநிலத் திட்டக்குழு அறிக்கை குறித்து பேசிய போது. சிறு தானியம் முதலிடத்திலும், கரும்பு இரண்டாம் இடத்திலும், மணிலா மூன்றாம் இடத்திலும், தேசிய அளவில் விவசாய உற்பத்தியில் சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், கரும்பு டன்னுக்கு நான்காயிரம் வழங்கப்படும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யப்படும், நிலுவையில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கான கொள்முதல் தொகையை உயர்த்தி வழங்கப்படும், என்று தெரிவித்து விட்டு தற்போது ஏமாற்றியதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும்,  அதல பாதாளத்திற்கு செல்லும் விவசாய தொழில் உற்பத்தியில், சாதனை படைத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும்,தற்போது விவசாயிகள் விவசாயம் மற்றும் 100 நாள் பணிகளை விடுத்து, நகரப் பகுதிக்கு கட்டுமான பணிகளுக்கு செல்லக்கூடிய அவல நிலை உருவாகியுள்ளது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *