Fire Accident: ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உயிரிழப்பு!

Advertisements

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

பிகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். கட்டடத்தில் தீப்பற்றியது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.

இதையடுத்து கட்டடத்துக்குள் இருந்து கிட்டத்தட்ட 20 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தீயணைப்புத் துறை துணை இயக்குநர் கூறுகையில்,

“இதுவரை இப்பகுதியில் உள்ள 16,000 விடுதிகளில் ஆய்வு நடத்தி அறிவுறுத்தல்களைக் கொடுத்துள்ளோம். ஆய்வு நடத்த வேண்டிய விடுதிகளின் பட்டியலில் இந்த விடுதியும் உள்ளது. நாங்கள் கொடுக்கும் அறிவுறுத்தல்களை ஒரு சில விடுதிகள் செய்கின்றன. பல விடுதிகள் செய்வதில்லை. முதற்கட்ட தகவலின்படி, சிலிண்டர் வெடித்ததே இந்த விபத்துக்குக் காரணம்”இவ்வாறு தீயணைப்புத் துறை துணை இயக்குநர் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *