முடிவுக்கு வந்தது திமுக – காங் கூட்டணி.!

Advertisements
ஆளுங்கட்சியான திமுக தரப்பில் கூட்டணி கட்சிகளுக்குரிய தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன. இதன் மூலம் கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த இழுபறியான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்திருக்கிறது ..
காங்கிரஸ் கட்சி உள்பட பல கட்சிகளின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து தற்பொழுது இறுதி முடிவு எடுக்கப்பட்டுவிட்டது .
திமுக கூட்டணியுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டது . இதில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது . தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சிக்கு சுமார் 4 சதவீத வாக்கு வங்கிகள் இருக்கும் நிலையில்,  அந்த கட்சி தரப்பில் இருந்து 30 தொகுதிகள் தங்களுக்கு வேண்டும் மூன்று அமைச்சர் பதவிகள் தரவேண்டும் எனபல  கோரிக்கைகளை முன்வைத்தனர்..
இதனால்,  திமுக தரப்பில் இழுபறியான பேச்சு வார்த்தை நீடித்து வந்தது . தற்பொழுது நேற்று திமுக தரப்பில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைக் கூட்டம் அறிவாலயத்தில் நடைபெற்றது . இதில் திமுக தரப்பில் டி ஆர் பாலு பங்கேற்றார். காங்கிரஸ் சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரீஸ் சோடங்கர் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர் …
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு காங்கிரஸ் சார்பில் சற்று கீழ் இறங்கி வந்து தங்களுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் திமுக தரப்பில் 23 தொகுதிகள் தான் தர முடியும் என உறுதியாக சொல்லப்பட்டது . மேலும் ஒரு ராஜ்யசபா பதவி தருவதாகவும் வருகிற உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தருவதாகவும் பேசப்பட்டது ..
இதனை தொடர்ந்து,  இறுதி கட்டமாக காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது . ராஜ்யசபா பதவிக்கு ஒரு வேட்பாளர் பெயரை நாளை மறுநாள் காணொளி கட்சி தெரிவிக்கிறது. இதேபோல் திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி எஸ்டிபிஐ மனிதநேய ஜனநாயக கட்சி கொங்கு இளைஞர் பேரவை முக்குலத்தோர் புலிப்படை ஆகிய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .
இவர்கள் அனைவருக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது . அதேசமயம் இவர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  இதில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு மட்டும் இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் பிரபல நடிகர் கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் .
இதனை அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டன. மு க ஸ்டாலின் தலைமையில் இதற்குரிய ஒப்பந்தம் நடத்தப்பட்டது .
முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் தலைவர் காதர் மைதீன் கையெழுத்திட்டார் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹரில்லாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் . இதில் முஸ்லிம் கட்சி ரெண்டு தொகுதிகளிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது மனிதநேய மக்கள் கட்சி ரெண்டு தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது .
இதற்கு இடையே திமுக தரப்பில் போட்டியிடுவதற்காக இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேலான விருப்பமனுக்கள் விற்பனை ஆகி உள்ளன. தற்பொழுது மார்ச் ஆறாம் தேதி வரை விருப்பமனுபெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய செய்தியாகும் …
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *