ஓபிஎஸ், கனிமொழி, கருணாஸ், சத்யராஜ் மகள் போட்டியிடும் தொகுதிகள்.!

Advertisements
வருகிற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஓ பன்னீர்செல்வம் கனிமொழி கருணாநிதி நடிகர் கருணாஸ் சத்யராஜ் மகள் திவ்யா ஆகியோர் திமுக தரப்பில் போட்டியிடுகிறார். இவர்களில் ஓ பன்னீர்செல்வத்திற்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி தரப்படுகிறது. திமுக வெற்றி பெற்றால் கனிமொழி தமிழ்நாடு அமைச்சராகிறார் .
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குறிய ஓ பன்னீர்செல்வம் ஒரு காலகட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகவும் பணியாற்றினார். இதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கட்சியை விட்டு நீக்கப்பட்டார் .
தற்பொழுது , திமுகவில் இணைந்திருக்கும் அவருக்கு அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட இருக்கிறது . இது மட்டுமல்லாமல் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவர் தேனி மாவட்டம் – போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக தரப்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் .
முன்னதாக,  அவரது சட்டை பையில் எந்த நேரமும் ஜெயலலிதா புகைப்படம் இருக்கும் . தற்பொழுது அதற்கு பதிலாக மு.க ஸ்டாலின் படம் வைத்திருக்கிறார்.  மேலும் தனது காரில் திமுக கொடி கட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே , நாடாளுமன்றத்தில் தொடர்ந்து எம்பியாக இருந்து வரும் கனிமொழி தற்பொழுது தமிழ்நாடு அரசியலுக்கு வருகிறார் .
அவர்,  திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனிதா ராதாகிருஷ்ணன் தற்பொழுது தனது உடல் நிலையை காரணம் காட்டி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்திருக்கிறார் ..
கனிமொழி எம்பி யை பொருத்தவரையில் கடந்த 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலிலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு இவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார்.
இதேபோல் , அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் இரண்டு முறையும் திமுக சார்பில் நான்கு முறையும் போட்டியிட்டு ஆறுமுறையும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் . இந்த நிலையில் தற்பொழுது திமுக தரப்பில் தெற்கு மண்டல பொறுப்பாளராக பதவி வைக்கும் கனிமொழி கருணாநிதி வருகிற சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அவருக்கு தமிழக ஆட்சியில் முக்கிய அமைச்சர் பதவி தரப்படும் என பேசப்படுகிறது .
இதனிடையே , பிரபல வில்லன் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜும் வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக தரப்பில் போட்டியிடுகிறார். அவர் இதற்கான விருப்ப மனுவை அண்ணா அறிவாலயத்தில் பெற்றுக் கொண்டார்.  இவர் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி திமுகவில் இணைந்தார் .
இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தான் அவரை மு க ஸ்டாலின் இடம் அறிமுகப்படுத்தி திமுகவில் இணைத்தார் . தற்பொழுது அவர் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் பதவி வைத்து வருகிறார் . அவர் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறித்து திவ்யா சத்யராஜ் இடம் கேட்டபோது என்னுடைய விருப்ப மனுவில் எந்த தொகுதி என்பதை தெரிவித்திருக்கிறேன் .
ஆனால் அதை இப்போது வெளியிட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார் . இதேபோல் பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.  முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திருவாடானை தொகுதியில் போட்டியிட்டு 8ஆயிரத் திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் .
இவர் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் திமுகவில் இணைந்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடன் தற்பொழுது நெருக்கமாக இருக்கிறார் . தற்பொழுது இவரது முக்குலத்தோர் புலிப்படை கட்சி திமுகவுடன் இணைந்திருக்கிறது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ் திமுக சார்பில் போட்டியிடுகிறார். குறிப்பாக அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *