
மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றவும், அதற்கு மாநில அரசுகள் அழுத்தம் தரவும் கோரி ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் நோக்கிப் பயணம் தொடங்கியுள்ளனர்.
உற்பத்திச் செலவைப் போல் அரைமடங்கு இலாபம் வைத்து விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும் என்று எம்எஸ் சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரையை நிறைவேற்றவும், வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகளின் பயணம் தொடங்கியுள்ளது.
பயணத்தைத் தொடங்கு முன்பு விவசாயிகள் காந்தி மண்டபத்தில் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தங்கள் பயணத்தின் நோக்கம் குறித்துக் குழுவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார்.


