மீண்டும் இணைகிறார்கள் சூர்யா த்ரிஷா !

நடிகர் சூர்யா, இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்துள்ளார். சூர்யாவின் 44-வது படமான இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார். ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார் சூர்யா. அவரது 45-வது படமான இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதில் நாயகியாக நடிக்க மிருணாள் தாக்குர் உட்பட சிலரிடம் பேசி வந்தனர். கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர்கள் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சூர்யாவும் த்ரிஷாவும் ஏற்கெனவே, ‘மவுனம் பேசியதே’, ‘ஆறு’ ஆகிய படங்களில் இணைந்து நடித்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *