மாதந்தோறும் 100 ரூபாய் எரிவாயு மானியம் வழங்க தேர்தல் ஆணையம் உறுதி..!

அனைத்து குடும்ப அட்டைக்கும் மாதந்தோறும் 100 ரூபாய் எரிவாயு மானியம் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழியைத் திமுக நிறைவேற்றவில்லை என்பதை மாநில பாஜக தலைவர் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் எரிவாயு மானியமாக நூறு ரூபாய் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் கிணற்றில் போட்ட கல்லாக அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நிலுவையில் நிற்பதும், ஆட்சி முடியப்போகும் இறுதி மாதங்களிலும்  ஆளும் அரசு அதை நிறைவேற்றப் போவதில்லை என்பதும் மக்களுக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களை இப்படி ஏமாற்றி அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து தான் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டுமா? என்று வினவியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *