லண்டனில் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை விலைக்கு வாங்கி அதை நினைவில்லமாக மாற்றியது பாரதிய ஜனதாக் கட்சி என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அம்பேத்கர் லண்டனில் படிக்கும் பொழுது தங்கி இருந்த வீட்டைச் சென்று பார்த்ததைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வீடு ஏலத்திற்கு வந்தபோது 30 கோடி ரூபாய்க்கு அதை விலைக்கு வாங்கி நினைவு இல்லமாக மாற்றியது பாரதிய ஜனதா கட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி அம்பேத்கரை எவ்வளவு வணங்குகிறது என்பதற்கு இதுவே சாட்சி என்றும் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் பெரியாரோடு பேசியிருந்த புகைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததாக முதலமைச்சர் கூறியதைக் குறிப்பிட்டுள்ள தமிழிசை, நீங்களாக இருந்தால் மாற்றுச் சிந்தனை உள்ள தலைவர்களின் படத்தை அகற்றி இருப்பீர்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
