London : வெளிநாடு வாழ் தமிழர்களிடையே மு.க.ஸ்டாலின் பேச்சு..!

Advertisements
சிறந்த உட்கட்டமைப்பு, திறமையான இளைஞர்கள், அமைதியான சூழல் ஆகியவற்றால் தான் தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்து வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லண்டன் மாநகரத்தில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு – இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, தமிழர்கள் அறிவில் சிறந்தவர்கள், கடுமையான உழைப்பாளிகள் என்று தெரிவித்தார்.
லண்டன் வாழ் தமிழர்களைப் பார்க்கும் போது அங்குள்ளவர்களுக்குத் தமிழ்நாட்டைப் பற்றி நல்லெண்ணம் வரும் என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும் வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் விளம்பரத் தூதர்கள் என்று குறிப்பிட்டார்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் பரபரப்பான வாழ்க்கையைக் கடந்து ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்றும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *