தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்று, தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நேரில் சந்தித்து தவெக தலைவர் விஜய் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு முதற்கட்டமாக 88 தொகுதிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு, கல்வி விருது வழங்கும் விழா கடந்த 30ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
தொடர்ந்து, 84 தொகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில், கடந்த ஜுன் 4ம் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து விழாவில் பேசிய விஜய், தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் என்றும், கல்வி விருது வழங்கும் விழாவில் 2026 தேர்தலை பற்றி பேச வேண்டாம் என கூறிய அவர், பள்ளி மற்றும் ஆசிரியர்கள் பற்றி மட்டுமே மேடையில் பேசுமாறும் மாணவர்களுக்கு விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

