Advertisements

ஸ்ரீ திரௌபதிஅம்மன்-ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது . மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் காரனோடை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீ தர்மராஜா ஆலயத்தில் முதலாம் ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி ஆலய திருப்பணி குழு நிர்வாகிகள் கிருஷ்ணன், ராமசந்திரன், ஜெயச்சந்திரன், குழந்தைவேல், ராமசந்திரன், கோபால், மாரி, தயாளன் உள்ளிட்ட கிராமபொதுமக்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மூலவர்களுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், தேன், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து.ஆலய பொறுப்பாளர்கள் முரளிகிருஷ்ணன், சுரேந்திரன், தினேஷ், காஞ்சனா, உமாமகேஷ்வரி, சசிகலா, லதா, மோகனா, விஜயா மற்றும் கிராமபொதுமக்கள் முன்னிலையில் மேளதாளத்துடன் மூலமந்திரங்கள் முழங்க ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத ஸ்ரீ தார்மராஜா சுவாமிகளின் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் உற்சவர் மாடவீதி உலா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள், கிராமபொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து நெய்தீபம் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவை முன்னிட்டு பரதநாட்டியம், ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற்றது. முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
Advertisements
