தமிழகத்தில் படத்தை வெளியிட முடியவில்லை – நடிகர் ஆரி வேதனை.!

தமிழகத்தில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்று நடிகர் ஆரி தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்….

நடிகர் ஆரி தனது நடிப்பில் வெளியான போர்த் ப்ளோர் படத்தை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பார்த்துவிட்டு பழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை என்றும், நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல பலருக்கும் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.

பின்னர், அரசியலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் சரி தனி மனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றார். இதையடுத்து, மால்களில் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. எங்கள் போர்த் ப்ளோர் படத்திற்கு இது தற்போது நடக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் தமிழர் தயாரிக்கும் படங்களை திரையிட முடிவதில்லை. ஏனென்றால், விளம்பரம் போதவில்லை என்று கூறுகின்றனர் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *