
கேரள மாநிலம் கோட்டயத்தில் ரூ.8.5 கோடியில் புனரமைக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமை தாங்கினார்.
விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமூக நீதி வரலாற்றின் முதல் வெற்றி விழா நகரமான வைக்கம் நகரில் தமிழகம், கேரள அரசு இணைந்து கொண்டாடுவது சிறப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.



