
நகரமே அழிந்தபோதும் கம்பீரத்துடன் காட்சி தரும் விருபாட்சர் கோவில்!
விருபாட்சர் கோயில் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்தக் கோயில். ஆற்றங்கரை துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயில் பெரும்பாலும் விஜயநகர பேரரசால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்தக் கோயில் பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் அமைந்துள்ளது. தலைகீழாக விழும் நிழல் இந்தக் கோயிலில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழுகிறது. இந்த மர்மம் என்னவென்று தெரியாமல் பலர் ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர். மைய மண்டபம் இதன் மத்தியில் அமைந்துள்ள மைய மண்டபம் ரங்க மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இது 1510ம் ஆண்டு கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

படையெடுப்பால் அழிந்த அற்புதங்கள் ஹம்பி பகுதியில் இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இருந்ததாகவும், அதையெல்லாம் படையெடுத்து வந்தவர்கள் அழித்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விருபாட்சா கோயிலின் சிறப்பு எத்தனை படையெடுப்புகள் வந்தாலும் இந்தக் கோயிலை எதும் செய்யமுடியவில்லையாம். 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்தக் கோயில் மட்டும் கம்பீரத்துடன் காட்சி தருகிறது.
வெகுகாலமாக இயங்கும் இந்தியாவின் ஒரே கோயில் ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இயங்கி வரும் இந்தக் கோயிலில் இதுவரை எந்த இடையூறுகளும் ஏற்பட்டதில்லையாம். இந்தியாவின் வெகுகாலமாக இயங்கிவரும் ஒரே கோயில் என்று வழங்கப்படுகிறது இந்த விருபாட்சா கோயில். இதன் அமைவிடம் மிக முக்கியமானதாகும். ஏனென்றால் இந்தச் சிறிய கோயில் துங்கபத்திரை நதிக்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது.

பெரிய வளாகம் சிறிய கோயில் இது அளவீட்டில் மிகச் சிறய கோயில் ஆகும். ஆனால் இதன் வளாகம் பெரியது. இது பக்தர்கள் வசதிக்காகச் செய்யப்பட்டதாக இருக்கலாம். சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் சில ஆதாரங்கள் இந்தக் கோயில் சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதற்கான உறுதிப்பாட்டை தருகின்றன. அதன் பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டுள்ளது.
இதைச் சுற்றிலும் சிறிய சிறிய கோயில்கள், தூண் மண்டபங்கள், கொடிக்கம்பங்கள், விளக்கு கம்பங்கள் என ஒரு நகரத்தைப் போலக் கட்டமைத்துள்ளனர். சாலை மார்க்கமாகச் செல்லக் கர்நாடக அரசுப் பேருந்து போக்குவரத்து கழகம் கர்நாடக மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் ஹம்பிக்கு பேருந்துகளை இயக்குகின்றது. இந்தப் பேருந்துகள் குறைவான கட்டணத்துடன் அதே சமயம் சௌகரியமான பிரயாணத்தை அளிக்கின்றன.

சில்க் துணிகளுக்குப் பேமஸான கோலார் – ஒரு அட்டகாச பிக்னிக் ரயிலில் செல்ல ஹம்பியிலிருந்து 13 கி.மீத்தொலைவில் ஹோஸ்பேட் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத் போன்ற முக்கியமான நகரஙகளுடன் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் வாடகைக் கார் அல்லது வேன்கள் மூலம் ஹம்பியை அடையலாம்.


