
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நடத்திய வாகன சோதனையில் 3 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
நாடு முழுவதும் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தனிநபர் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சொகுசு கார் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகளில் கொண்டு சென்றால் தேர்தல் பறக்கும்படை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனைக்குப் பிறகு ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்வது உறுதி செய்யப்பட்டால் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.,
இந்த நிலையில் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சோதனை நடத்தியபோது அவ்வழியே வந்த பொலிரோ பிக்அப் சிறிய ரக சரக்கு வாகனத்தில் அந்தியூர் அருகே உள்ள பிகே புதூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் ஆவணங்கள் ஏதுமின்றி ஒரு லட்சத்து 2750 பணம் எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டு பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.,
அதேபோல் அந்தியூர் பத்ரகாளி அம்மன் கோவில் ரவுண்டானா பகுதியில் நடந்த வாகன சாதனையின்போது சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த பிரகதீஸ்வரன் என்பவர் ஆம்னி வேனில் இரண்டு லட்சம் ரூபாய் ரொக்க பணத்துடன் சென்றது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் புதிதாகக் கார் வாங்குவதற்காகக் கோபிசெட்டிபாளையம் நோக்கி உறவினர்களுடன் ஆம்னி தான் மூலம் சென்றது தெரிய வந்தது. இருப்பினும் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் சென்றதால் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணத்தை ஒப்படைத்து உறிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர்…

