Kallakurichi Hooch Tragedy:கள்ளச் சாராய பலி 61 ஆக அதிகரிப்பு!

Advertisements

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சிலர் கடந்த 18, 19-ம் தேதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் குடித்துள்ளனர். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று வரை கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மொத்தம் 220 பேர் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (ஜூன் 26) காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, கள்ளக்குறிச்சியில் 111, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 12 பேர் என மொத்தம் 157 பேர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த 2 உயிரிழப்புகளும் இன்று நேர்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *