
தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, அமைச்சர்கள், பாஜக நாடாளுமன்ற உறப்பினர்கள் கலந்துகொண்டனர். இதேபோல் தெலுங்குதேசக் கட்சி, ஐக்கிய ஜனதாதளக் கட்சி, சிவசேனைக் கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
முதன்முறையாகத் திரிணாமூல் காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து புதிய கட்சியில் இணைந்துள்ள காகோலி கோஷ், சதாப்தி ராய், சாயோனி கோஷ் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, வணிகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.



