
தீபாவளியையொட்டித் தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அக்டோபர் 16, 18 ஆகிய நாட்களில் இரவு பதினொன்றரை மணிக்குத் தாம்பரத்தில் புறப்படும் ரயில் மறுநாள் பகல் 1.25 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும்.
அக்டோபர் 17ஆம் நாள் பிற்பகல் 3.35 மணிக்குக் கன்னியாகுமரியில் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை நாலரை மணிக்குச் செங்கல்பட்டு வந்தடையும்.
மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


