எடப்பாடி, டிடிவி , புசி ஆனந்த் – செளமியா போட்டியிடும் தொகுதி.!

Advertisements

வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி , அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் , தமிழக வெற்றி கழக பொதுச்செயலாளர் புசி ஆனந்த், அன்புமணி மனைவி சௌமியா அன்புமணி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது .

தற்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 1974 ஆம் ஆண்டு அதிமுக தொண்டராக அரசியலுக்குள் நுழைந்தார். முதன் முதலாக 1989 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இதன் பின்னர் 1991 ஆம் ஆண்டு மீண்டும் அதே எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார்

1990களில் மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்தார் 2006 ஆம் ஆண்டு அதிமுக பிரச்சார செயலாளராகவும் 2007 ஆம் ஆண்டு அமைப்புச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார் . இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அமைச்சரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சராக பதவி வகித்தார் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார் .

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரான ஓ பன்னீர்செல்வம், 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார் . இதனை அடுத்து அதே ஆண்டு அதே மாதம் 16 ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றார். முதலமைச்சர் பதவியுடன் உள்துறை மதுவிலக்கு மற்றும் கலால் துறைகளின் பொறுப்பையும் பழனிச்சாமி கவனித்து வந்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை தொடர்ந்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வருகிறார் . இந்த நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .

அந்த வகையில் அவர் எடப்பாடி தொகுதியை விட்டு இந்த முறை இடம் மாறுகிறார். இதற்கு காரணம் எடப்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. தற்பொழுது பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியிலா இல்லாததால் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுன் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது . தலா ஒவ்வொரு தொகுதிக்கும் மூன்று வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார்கள் . அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது .

இதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது . டிடிவி தினகரனை பொறுத்த வரையில் , அதிமுக பொருளாளராகவும் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து இவர் நீக்கப்பட்டார் .

கடந்த 2018 ஆம் ஆண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற தனது அரசியல் கட்சியை தொடங்கினார் . கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்டார் . இவரை எதிர்த்து அதிமுக சார்பில் கடம்பூர் ராஜு போட்டியிட்டார். இந்த தேர்தலில் டிடிவி தினகரன் தோல்வியை தழுவினார் .

தற்பொழுது அவர் மீண்டும் கோவில்பட்டி தொகுதியிலேயே போட்டியிடுவார் என தெரிய வருகிறது. கோவில்பட்டி தொகுதியை பொறுத்தவரையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாளர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது .

கடலூரைச் சேர்ந்த இவர் பாண்டிச்சேரி மாநிலத்தில் உள்ள புசி தொகுதியில் கடந்த 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் . தற்போது அவர் தமிழக வெற்றி கழகம் சார்பில் சொந்த ஊரான கடலூர் தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது.
கடலூர் தொகுதியை பொறுத்தவரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த ஜி ஐயப்பன் வெற்றி பெற்றார்.

மக்கள் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் சௌமியா அன்புமணி பசுமைத் தாயகம் என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார் இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரி ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது.. இதேபோல் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியில் புதிதாக செயல் தலைவர் பொறுப்பு வகிக்கும் அவரது மூத்த மகள் காந்திமதியும் தர்மபுரி அல்லது கிருஷ்ணகிரியில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

அனேகமாக காந்திமதி தர்மபுரி தொகுதியில் போட்டியிடலாம் என தெரிகிறது. தர்மபுரியில் நடந்த கூட்டத்தில்தான் காந்திமதியை பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய செயல் தலைவராக மருத்துவர் ராமதாஸ் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சௌமியா அன்புமணிக்கும் காந்திமதிக்கும் மிகப்பெரிய போட்டி நிலவும் என தெரிய வருகிறது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *