பாஜக குறி வைக்கும் 20 கோவில் தொகுதிகள் அமித்ஷா லிஸ்ட்..!

Advertisements
வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி எப்படியாவது வட மாநிலங்கள் போல் தமிழகத்திலும் ஆட்சி கட்டிலில் அமர்ந்து விட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய திட்டங்களை வகுத்து வருகிறது . அந்த வகையில் இன்னமும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வர் வேட்பாளர் என பாஜக தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை .
அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு அதிகப்படியான தொகுதிகளில் வெற்றி பெற்றால் தமிழக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து விடலாம் என பாரதிய ஜனதா கட்சி ஒரு விதமான கணக்கு போடுகிறது.  அந்த வகையில் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெரும் பாஜக வெற்றி பெறுவதற்கான சில வியூகங்களையும் வகுத்து இருக்கிறது .
அதாவது , பாரதிய ஜனதா கட்சி என்பது இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டதாக இருக்கிறது.  எனவே இந்துக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உயர்த்தும் வகையில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் 20 சதவீத வாக்கு வங்கியை பெற வேண்டும் என பாஜக முன்னெடுத்திருக்கிறது .
அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள கோவில் நகரங்களில் போட்டியிட்டால் இந்து ஆன்மீகவாதிகளின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக பெறலாம் என டெல்லி பாஜக மேலிடம் கருதுகிறது . அந்த வகையில் தமிழ்நாட்டில் 20 முக்கிய கோவில் நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு பட்டியல் டெல்லிக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
அந்த பட்டியல் தற்பொழுது உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் இருக்கிறது. இது தொடர்பாக அமித்ஷா எடப்பாடி பழனிச்சாமி இடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் . ஆனால் அவர்கள் கேட்கும் பல தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற தொகுதியாகவும் அதிமுக கோட்டையாகவும் இருப்பதால் குறிப்பிட்ட பல தொகுதிகளை ஒதுக்கி தர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதமாக இருக்கிறார் .
இதன் நிமித்தமாக , தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.  இந்த நிலையில் டெல்லி பாஜக மேல் இடம் தமிழ்நாட்டில் குறி வைத்துள்ள 20 சட்டமன்ற கோவில் தொகுதிகள் பட்டியல் வெளியே கசிந்து இருக்கிறது .
அந்த வகையில்,  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் , ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில்,  சிதம்பரம் நடராஜர் கோவில்,  திருச்செந்தூர் முருகன் கோவில் , ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,  திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் , கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்,  திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் , தென்காசி காசி விசுவநாதர் கோவில் , திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்,  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் கும்பகோணம் கோவை தெற்கு தர்மபுரி என 20 தொகுதிகளை பாஜக குறி வைத்திருக்கிறது .
இது குறித்து,  எடப்பாடி பழனிச்சாமி இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருக்கிறார் . ஆனால் பாரதிய ஜனதா கட்சி கேட்கும் இந்த தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகள் அதிமுகவின் கோட்டையாக இருக்கின்றன.  குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதே போல் பல தொகுதிகள் அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் ஆகும் எனவே அந்த தொகுதிகளை விட்டுத் தர முடியாது என எடப்பாடி பழனிச்சாமி மறுப்பு தெரிவித்து வருகிறார் .
ஆனால் , அதே வேளையில் மேற்படி 20 தொகுதிகளில் அதிமுக தோல்வியடைந்த தொகுதிகளை குறிப்பிட்டு அந்த தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி சார்பில் தீவிரமான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது . எனவே வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் கோவில் அமைந்துள்ள தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பாலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி 50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே தயாராகிவிட்டது . இந்த பட்டியலும் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கையில் இருக்கிறது . எனவே கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பாரதிய ஜனதா கட்சி சார்பிலான வேட்பாளர்களும் அறிவிக்கப்படுவார்கள் என்பது முக்கிய செய்தியாக பார்க்கப்படுகிறது..
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *