தமிழகத்தில் தொழில் முதலீட்டாளர்கள் வராததற்குத் திமுக அரசின் கலெக்சன் கமிஷன் கரப்சன் தான் காரணம் எனப் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக நிர்வாகி இல்லத் திருமணத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியதே அவர் மீண்டும் வெற்றிபெற்றதற்குக் காரணம் என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் சமூக நீதியை ஸ்டாலின் குழி தோண்டிப் புதைத்து விட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டுக்குத் தொழில் முதலீடுகள் வராததற்குத் திமுகவின், கலெக்சன், கமிஷன் கரப்சன் ஆகியனதான் காரணம் எனக் குறிப்பிட்டார்.

