மீண்டும் திமுக வெற்றி பெற உழைப்போம்..!

வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் திமுக மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி தலைமையில், மகளிர் பரப்புரை பயிற்சி கூட்டம்   நடைபெற்றது. கூட்டத்தில், அமைச்சர்  காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர் வருகின்ற சட்ட மன்ற தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெறுவதற்கு தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதில், மாநில சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வினோத் காந்தி, அரக்கோணம் தொகுதி பார்வையாளர் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *