திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் – அண்ணாமலை!

திருப்பரங்குன்றத்தில் உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்றத் தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என நாம் தலைவர் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் தனியார் கருத்தரிப்பு மையம் தொடக்க விழாவில் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தமிழக அரசு மதித்துச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உரிய பாதுகாப்புடன் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நீதிமன்றம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய பின்னரும், கடந்த கால திமுக அரசும் தற்போதைய அரசும் அதனை ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

 

தமிழகத்தில் முருகப்பெருமானை வழிபட்டுக் கடந்த ஆறு நாட்களாக விரதம் இருந்து வந்த முருக பக்தர்கள், தங்களது விரதத்தை நிறைவு செய்ய உள்ள நிலையில் அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். செஞ்சியில் காணாமல் போன 7 வயதுச் சிறுமி 35 நாட்களைக் கடந்தும் இதுவரை மீட்கப்படாதது கவலை அளிப்பதாகத் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துச் சிறுமியைப் பத்திரமாக மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *