மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிச் சுற்றுப் போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இண்டியன்வெல்ஸ் நகரில் மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிச் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா உடன் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற நேர் சேட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தினார். இதன்மூலம், ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா இறுதி சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



