En Mann En Makkal: அண்ணாமலைக்கு கருப்புக்கொடி காட்ட முயன்ற காங்கிரசார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள்  நடைபயணத்திற்காக இன்று வரவுள்ள நிலையில், கருப்புக்கொடி காட்ட தயாரான காங்கிரஸ் கட்சி மாவட்ட துணைத் தலைவர் இதயத்துல்லா உள்பட 20க்கும் மேற்பட்டோரை  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாககட்சி அலுவலகத்தில் வைத்துப் போலீசார் கைது செய்துள்ளனர்…

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக முழுவதும் என் மண் என் மக்கள் தலைப்பில் பாதயாத்திரையை தொடங்கி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் இன்று நடைபயணம் மேற்கொள்ள இருப்பதால் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் இதயத்துல்லா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர்  கருப்புக்கொடி காட்ட உள்ளதாகச் சங்கராபுரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில் காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியினரை அவர்களின் அலுவலகத்திலேயே கைது செய்துள்ளனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய  கள்ளக்குறிச்சி மாவட்ட துணைத்தலைவர் இதயத்துல்லா தொடர்ந்து தமிழக பாஜக    தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் நடை பயணத்தில் இந்திய கூட்டணி பற்றியும் இந்திய கூட்டணி தலைவர்களைப் பற்றியும் பொய் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகவும், இந்திய கூட்டணிபற்றிக் கொச்சைப்படுத்த வகையில் பேசி வருவதாகவும் அதனால்தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வகையில் கருப்புக்கொடி காட்ட முற்பட்டதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *