Edappadi Palaniswami:விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன்!

Advertisements

சென்னை :நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஜய்-க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய்க்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

பொதுவாழ்வில் இணைந்துள்ள விஜய், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் எனக் கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *