
அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக உத்தரவுக்கு கட்டுப்படவில்லை என கூறி ஹாவர்ட் பல்கலைகழகத்திற்கு 2 புள்ளி 2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்துள்ளார். இந்த பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் மத்திய நிதியான 2 புள்ளி 2 பில்லியன் டாலர்களையும், 60 மில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைத்துள்ளார் அதிபர் டிரம்ப். இதற்கு டிரம்ப் கூறும் காரணம். ஹாவர்ட் பல்கலைகழகம் தனது நிர்வாக உத்தரவை பின்பற்றவில்லை என்பதே.
பல்கலைகழக வளாகத்தில் முககவசங்களை அனுமதிக்க கூடாது, DEI என அழைக்கப்படும் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய திட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. யூத எதிர்ப்பு கொள்கை கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி அளிக்ககூடாது, பல்கலைகழக விதிகளை கடைபிடிக்காத மாணவர்கள் குறித்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் டிரம்ப் அரசின் இந்த உத்தரவு எதையும் பின்பற்றமுடியாது என ஹாவர்ட் பல்கலைகழக தலைவர் Alan Garber நிராகரித்து விட்டார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், ஹாவர்ட் பல்கலைகழகம் அதன் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாது என குறிப்பிட்டிருந்தார். இதனை தொடர்ந்து தான், டிரம்ப் அரசு, மத்திய நிதியான 2 புள்ளி 2 பில்லியன் டாலர்களையும், 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தங்களையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கான நிதியை வெட்டியது. மட்டுமல்லாது பல்கலையின் சார்பில் உள்ள சொத்துக்களுக்கு வருமான வரியை கொடுக்க வேண்டும் என்று கூறியது. பொதுவாக கல்விய நிலைய சொத்துக்களுக்கு வரி வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். ஆனால் ஹாவர்ட் பல்கலைக்கு மட்டும் வரி வசூல் செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இப்படியான நடவடிக்கைகளுக்கு சர்வதேச அளவில் கடும் கண்டன குரல்கள் எழுந்தன.
முக்கிய பல்கலைகழகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் டிரம்ப், ஏற்கெனவே கொலம்பியா பல்கலைகழகத்திற்கு 400 மில்லியன் டாலர் நிதியை நிறுத்தி வைத்தார்,


