கனிமா பாடலின் இன்னொரு வெர்ஷன்.. சந்தோஷ் நாராயணன் சம்பவம்..!

Advertisements

சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த 1ஆம் தேதி வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.

ரெட்ரோ படம் சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த படம். காரணம் இதற்கு முன்னர் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்வி படமாக மாறியது. இதனால் ரசிகர்கள் அப்செட் அடைந்தார்கள். இந்நிலையில்தான் ரசிகர்கள் நம்பிக்கை மொத்தமாக ரெட்ரோ படத்தின் மீது விழுந்தது.

இந்த படத்தைப் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை சொல்லி வந்தாலும், படத்திற்கு நாளுக்கு நாள் கலெக்‌ஷன் கூடுக்கொண்டே போகிறது. இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் தியேட்டருக்கு சென்று இந்த படத்தை பார்க்க மற்றொரு காரணம் படத்தின் இசையமைப்பாளர், சந்தோஷ் நாராயணன். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்து இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதையில் கொஞ்சம் பிரச்னை இருந்தாலும், ரசிகர்களை படத்தில் மிகவும் கனெக்ட் செய்ய வைத்தது இவரின் இசை தான் என்று கூறுகிறார்கள்.இந்நிலையில் ரெட்ரோ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், கனிமா பாடலின் இன்னொரு வெர்ஷனை பகிர்ந்துள்ளார். மேலும், இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய இன்னொரு வெர்ஷன் தான் இது என்று தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *