
திருவள்ளூரில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்களுக்கான மாநாட்டில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 16 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களைப் பாராட்டிச் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர்வழங்கினார்.
திருவள்ளூரில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களுக்கான மாநாடு அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நிஷாந்தினி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் வா.பாலமுருகன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஷியாம் சுந்தர், மரியசூசை, ரத்தின விஜயன் மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோர் முன்னிலையில்நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய பள்ளிமாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் மாணவர்களுடைய அறிவுத்திறனை ஆய்வு செய்து அவர்களுக்குக் கல்வி பெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பள்ளிக்கூடத்தில் இந்த விஷயங்களில் மாணவர்கள் சிறந்து விளங்குவதாகச் சொல்றவங்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். திருவள்ளுர் மாவட்டத்தில் நம்ம அரசுப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும். நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் நீங்கத் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுக்க வேண்டும்.எல்லா பள்ளிக்கூடத்திலும் நம்ம பள்ளிகளைத் தலை சிறந்த பள்ளியாக உருவாக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பொய்கால் குதிரை, மயிலாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 2023-2024-ஆம் கல்வியாண்டில் சிறப்பாகச் செயல்பட்ட 16 அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்களைப் பாராட்டிச் சிறந்த பள்ளி மேலாண்மைக் குழுவிற்கான பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார். இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

