Elon Musk – Trump : டிரம்ப்- எலான் மஸ்க் மோதல்! மன்னிப்பு கேட்டஎலான் மஸ்க்.

Advertisements

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக, டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டு வந்தனர். டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனப்படும் வரிக்குறைப்பு மசோதாவை மஸ்க் விமர்சித்தார். செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா, முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார். டிரம்ப் – எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து தான் தெரிவித்த கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்வதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பதிவில், ” கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறித்து, தனது சில பதிவுகள் அளவு மீறி சென்றுவிட்டதாகவும், அதற்காக தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அவர் கூறினார்.  எலான் மஸ்க்கின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட டிரம்ப், “அவர் மன்னிப்பு கேட்டது மிகவும் நல்ல விஷயம்” என்று தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *