
இந்திய அரசமைப்புச் சட்டம் அச்சுறுத்தலில் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி நாடாளுமன்றத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு ராகுல்காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவின் ஜனநாயக, சமூகக் கட்டமைப்புக்கு அம்பேத்கரின் போதனைகள் வழிகாட்டும் என்று தெரிவித்தார். அவர் உருவாக்கித் தந்த அரசியலமைப்பையும், அவரின் சிந்தனைகளையும் நாம் காக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
அந்த அரசியலமைப்பு அச்சுறுத்தலில் உள்ளதாகவும், அதைக் காக்க வேண்டியது குடிமக்களின் கடமை என்றும் குறிப்பிட்டார்.




