சென்னை பத்திரி​கை​யாளர் மன்றத்​துக்கு தேர்தல்!

Advertisements

சென்னை:

Advertisements

 சென்னை பத்திரி​கை​யாளர் மன்றம் (பிரஸ் கிளப்) 52 ஆண்டுகள் பழமைவாய்ந்​தது. இந்த மன்றத்துக்குப் பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்​தப்​பட​வில்லை. இந்நிலை​யில், தேர்தல் நடத்​தும் அதிகாரி​யாக, சென்னை உயர் நீதி​மன்ற ஓய்வு​பெற்ற நீதிபதி வீ.பார​தி​தாசன் கடந்த 18-ம் தேதி நியமிக்​கப்பட்​டார்.அதைத் தொடர்ந்து, சென்னை பத்திரி​கை​யாளர் மன்றத்​துக்கான தேர்தல் அட்டவணையைத் தேர்தல் அதிகாரி நீதிபதி பாரதி​தாசன் வெளி​யிட்​டார்.

அப்போது அவர் கூறிய​தாவது:சென்னை பத்திரி​கை​யாளர் மன்றத்​துக்கு ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்​கள், ஒரு பொதுச்​செய​லா​ளர், ஒரு இணைச் செயலா​ளர், ஒரு பொருளாளர் ஆகிய 6 நிர்​வாகி​களை​யும், 5 செயற்​குழு உறுப்​பினர்​களை​யும் தேர்வு செய்​வதற்கான தேர்தல் அறிவிக்கை வெளி​யிடப்​படுகிறது.

இந்தத் தேர்தலில் போட்​டி​யிடு​வதற்கான வேட்பு மனு தாக்கல் நவ.30-ம் தேதி (இன்று) தொடங்கி டிச.7-ம் தேதி முடிவடையும். தினமும் (ஞாயிறு விடு​முறை தவிர) பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்​புமனு தாக்கல் செய்ய​லாம். டிச.9-ம் தேதி பிற்​பகல் 2 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்கள் பரிசீலிக்​கப்​படும். 10-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொள்​ளலாம். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வேட்​பாளர் பட்டியல் வெளி​யிடப்​படும். டிச.15-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்​குப்​ப​திவு நடைபெறும்.

அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வாக்​குகள் எண்ணப்​பட்டு, முடிவுகள் அறிவிக்​கப்படும். என்னிடம் வழங்​கப்​பட்ட உறுப்​பினர்கள் பட்டியல்​படி, மொத்தம் 1,502 பேர் உறுப்​பினர்​களாக உள்ளனர். இந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் மட்டுமே தேர்​தலில் போட்​டி​யிட​வும், வாக்​களிக்​க​வும் முடி​யும். தேர்​தலின்​போது, உறுப்பினர்களுக்குப் புதிதாக வழங்​கப்​பட்ட அடையாள அட்டையைக் கண்டிப்பாகக் காண்பிக்க வேண்​டும். தேர்​தல் வெளிப்​படை​யாக​வும், நேர்​மை​யாக​வும் நடத்​தப்​படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *