எடப்பாடி பழனிசாமி இன்று முதல் சூறாவளி பிரசார சுற்றுப்பயணம்..!

Advertisements

சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக தலைமை அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக சார்பிலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, சென்னை மயிலாப்பூரில் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து, 27 ஆம் தேதி ஆலந்தூரில் நடைபெறும் கூட்டத்திலும், தாம்பரத்தில் நடைபெறும் கூட்டத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து, 28 ஆம் தேதி ஆர்.கே.நகரிலும், திருவொற்றியூரிலும் நடைபெறும் கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *