பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருவதாக தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியலிலும் தேர்தலிலும் முறைகேடு எனக் காங்கிரஸ் பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருவதாகப் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

லமைப்புச் சட்டத்துக்கு எதிராக இந்த நாட்டில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது எனத் தெரிவித்தார். வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது முதன்முறையாக நடைபெறவில்லை என்றும் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மின்னணு வாக்கு எந்திரங்கள் பற்றியும், அரியானா, மகாராஷ்டிர மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் பற்றியும் காங்கிரஸ் மலையளவு பொய்களைச் சொல்லி வருவதாகவும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

எந்தச் சிக்கலாக இருந்தாலும் அவற்றை நாடாளுமன்றத்தில் பேசிக்கொள்ளலாம் என்று எதிர்க்கட்சியினருக்குத் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *