Pablo Picasso: பிறந்த தினம்!

அக்டோபர் 25 புகழ் பெற்ற பிக்காசோ பிறந்த தினம்.

20-ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாட்லோ பிக்காசோ 1881 -ஆம் ஆண்டு அக்டோபர் 25 -அம் தேதி ஸ்பெயினில் உள்ள மலாகாவில் பிறந்தார். ஜார்ஜெஸ் பிராக் என்பவருடன் இணைந்து கியூமிசம் என்னும் கலைப்பணி ஒன்றை ஆரம்பித்து  வைத்ததால் பெரிதும் அறியப்பட்டார்.

இவர் தனது ஏழாவது வயதிலேயே ஒரு சிறந்த ஒவியனைப் போல  ஓவீயங்களை  பிலாஸ்டர் மண்ணில் மிக தத்ரூபமாக சிற்பங்கள் செய்வதிலும் தேர்ச்சி பெற்றார். அக்டோபர் 25..12000 பிக்காசோ தன் வாழ்நாளில் 1885 சிற்பங்கள்,1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மற்றும் மண்பாண்ட சின்னங்கள்,  12000 சாதாரண சித்திரங்கள் வேலைப்பாடுகள் உட்பட 5000 -க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அமைதி  சின்னமாக விளங்கும் புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர்  பிக்காசோ தான் வரலாற்றில் தனக்கென்று  தனி இடம் பிடித்த பிக்காசோ தனது 91 -வது வயதில் 1973-ல் காலமானார். அவர் மறைந்தாலும்  அவரது  படைப்புகள் இன்றும் அவரது புகழை பறைசாற்றிக் கொண்டே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *