
பீலா வெங்கடேசன் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளரும், மாவட்ட ஆட்சியருமான பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், பீலா வெங்கடேசன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், பீலா வெங்கடேசன் மறைவுச் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.





