
கீழடி அகழாய்வுக்கு அ.தி.மு.க. தான் காரணம் என்று, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை என்றும், அந்த அடிப்படையில் மதுரையில் பா.ஜ.க. நடத்தும் முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார். கீழடியில் அகழாய்வு நடத்தியதற்கு அ.தி.மு.க. தான் காரணம் என்றார்.
மேலும், தி.மு.க. ஐடி விங் வெளியிட்ட கேலிச்சித்திரம் குறித்த கேள்விக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பர் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.




