சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு

Advertisements

சிவில் சர்வீசஸ் முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாகத், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  2025ஆம் ஆண்டின் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு, முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சி மேற்கொள்ள ஏதுவாகத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய் நேரடியாக  வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு நடப்பு ஆண்டில் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இணையத்தளத்தில் இன்று முதல் அடுத்த மாதம் 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *