ED summon: அரவிந்த் கெஜ்ரிவால் பதில் கடிதம்!

Advertisements

அமலாக்கத் துறை சம்மனுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில் கடிதம் – சட்டவிரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என சாடியுள்ளார்.

டில்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனைக் கண்டித்து கெஜிரிவால்  அமலாக்கத்துறையின் இச்செயல் சட்ட விரோதமானது, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு நவம்பர் 2-ஆம் தேதி  காலை 11 மணிக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ள நிலையில் அவர் அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பாஜகவின் வலியுறுத்தலின்படி 5 மாநிலத் தேர்தலில் தான் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கவே அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளதாகவும், அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதால் தனக்காக சம்மனை அமலாக்கத் துறை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கெஜ்ரிவால்  மத்தியப் பிரதேச மாநிலம் சிங்ராலியில் பிரச்சாரத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்த நிலையில்  அவர் ஆஜராவாரா இல்லை திட்டமிட்டபடி பிரச்சாரத்துக்கு செல்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவர் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவாரா என்பது பற்றி அக்கட்சி வட்டாரம் மவுனம் காத்து வருகிறது.

இருப்பினும், டெல்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி துக்ளக் சாலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தத் திரளக்கூடும் என்று கணிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் டெல்லி சமூகநலத் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அவருக்குத் தொடர்பான 9 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *