கல்வியும் மருத்துவமும் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது..!

Advertisements

கல்வியும் மருத்துவமும் முன்பு தொண்டு செய்யும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகவும் இப்போது அவை வணிகமயமாகி விட்டதாகவும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஒரு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கல்வி, மருத்துவம் ஆகிவற்றின் தேவையை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

போதிய பணமில்லாத காரணமாக ஏழை எளிய மக்களால் கல்வியையும் மருத்துவத்தையும் பெற முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கல்வியும் மருத்துவமும் முன்பு தொண்டு செய்யும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாகவும், இப்போது அவை வணிக மயமாகி விட்டதாகவும் மோகன் பகவத் சுட்டிக்காட்டினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *