விஜய் அரசை கவிழ்க்க ஸ்டாலின் – உதயநிதி போடும் புதிய திட்டம்..!

Advertisements

2026 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று தன் மகனான உதயநிதியை முதல்வராக அமர்த்தி பார்க்க வேண்டுமென்று கணக்கு போட்டார் ஸ்டாலின். அந்த கணக்கில் மண் விழுந்தது மிச்சம். அதுவும் இப்போது கட்சி துவக்கிய சின்ன பையனிடம் தோற்றது இல்லாமல் தானும் தோற்று மூளையில் முடங்கி வேண்டிய நிலைக்கு தன்னி விட்டாரே விஜய். அந்த அதங்கத்தில் தான் அப்பனும் மகனும் விஜய் ஆட்சி இன்னும் சில தினங்களில் மாதங்களில் கவிழுயும் என்று அங்கலாயத்து வருக்கிறார்கள். விஜய் ஆட்சி கவிழுக்க ஸ்டாலினும் மகனும் எடுந்த நடவடிக்கையெல்லாம் தோற்றுபோனதே தவிர வேறொன்றும் இல்லை. இப்போது அவர்கள் புதிய அஸ்திரத்தை எடுத்துள்ளார்கள் அது என்ன என்பதை பார்ப்போமா..

ஸ்டாலின் தவெக அரசு 6 மாதங்கள் கூட நீடிக்காது என்று பேசி வருவது கலவையான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. இந்த ஆட்சியை கலைக்க திமுக முயற்சிக்கிறது என்று ஒரு தரப்பினரும், ஆட்சி நடத்தவே தெரியாமல் தானாக கவிழ்ந்து விடும் சூழலில் இருப்பதை தான் சுட்டிக் காட்டுகிறோம் என்று மற்றொரு தரப்பினரும் முட்டுக் கொடுத்து வருகின்றனர். திமுகவின் இத்தகைய அணுகுமுறை சரியா என்ற விவாதம் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

திமுக என்றாலே ஆளுங்கட்சியாக இருப்பதை காட்டிலும் எதிர்க்கட்சியாக தான் சிறப்பாக செயல்படும். 1977 முதல் 1987 வரை எதிர்க்கட்சி அந்தஸ்தில் திமுக இருந்த போது கருணாநிதி தான் தினசரி தலைப்பு செய்தியாக இருப்பார். ஆட்சிக்கு எதிராக என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைக்க போகிறாரோ என்று அதிமுக ஒருவித கலக்கத்துடனே நாட்களை நகர்த்தி வந்ததாக கூறுவர்.

அப்படிப்பட்ட திமுக தற்போது ஆட்சி கவிழ்ப்பு தொடர்பான குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளது. ஒருவேளை தவெகவிடம் தோல்வி அடைந்ததை ஏற்க முடியாத நிலையில் இருக்கிறார்களோ என்ற எண்ணம் தான் இப்படி பேச வைக்கிறதா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
அதேசமயம் திமுக அப்படி ஒன்றும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துவிடவில்லை.

1991ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா முதல்முறை ஆட்சியை பிடித்த போது, திமுக வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதனுடன் ஒப்பிடுகையில் 2026 தேர்தலில் 59 இடங்களை பெற்று எதிர்க்கட்சி இடத்தில் அமர்ந்துள்ளது. எனவே திறம்பட செயல்படுவதற்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

ஒருவேளை எடப்பாடி பழனிசாமியிடம் தோல்வி அடைந்திருந்தால் இதுபோன்ற மனநிலைக்கு ஸ்டாலின் வந்திருப்பாரா என்பதே சந்தேகம் தான். புதிதாக வந்தவரிடம் தோற்றதை ஏற்க முடியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை, விஜய் முதல்வர் ஆனதை இதுவரை ஏற்க மறுக்கின்றனர் ஸ்டாலினும் உதயநிதியும். விஜய் முதல்வரான யதார்த்தத்தை ஏற்கவில்லை என்பதை தான் அவர்களின் செயல்பாடுகள் காட்டுகின்றனர்.

ஸ்டாலின் மட்டுமின்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசும் போதும் கூட, இந்த ஆட்சியை நாங்கள் கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கவிழ்ந்துவிடும் என்கிறார். இது மக்கள் மத்தியில் எதிர்மறையான உணர்வை தான் ஏற்படுத்தும். அகாலி தளத்திற்கு பின்னர் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே மாநில கட்சி திமுக மட்டும் தான். அந்த அளவிற்கு செல்வாக்கு குறையாமல் இருக்கிறது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கும் அளவிற்கு ஏன் அஞ்சி ஓடுகிறார். விசாரணையை எதிர்கொள்ள வேண்டியது தானே. இந்த இடத்தில் தான் ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபடுகிறார்களோ என்ற கேள்வி சந்தேகம் வலுக்கிறது. திமுக இனி வரும் நாட்களில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

அதை விட்டுவிட்டு அரசியல் ரீதியாக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொல்வதெல்லாம் மக்கள் மத்தியில் எடுபடாது. இந்த விஷயத்தை புரிந்து கொண்டு தங்களது அணுகுமுறையை திமுக திருத்தி கொள்ளும் வேண்டும். இல்லையென்றால் கருணாநிதி எப்படி எம்.ஜி. ஆருக்கு எதிராக அரசியல் செய்ய முடியாமல் அவர் உயிருடன் இருக்கு வரை அவரால் முதல்வராக முடியவில்லை. அதுபோல் ஸ்டாலினுக்கு ஏற்படாலாம்.

அதன் பின் தன் மகனை முதல்வராக முடியாமல் போகலாம். இப்போது அண்ணாமல¬ வேறு அரசியலுக்கு வரயிருக்கிறார். அதனால் இன்று அதிமுக என்ன நிலையில் இருக்கிறதோ அதேபோல் எதிர்காலத்தில் திமுகவுக்கும் ஏற்படலாம்..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *