அய்யா வைகுண்டரை முடி வெட்டுபவர் என சித்தரித்ததால் பரப்பரப்பு..!

Advertisements
மனிதக் கடவுளாக அவதரித்தவர் ஐயா வைகுண்டசாமி என்று போற்றப்படும் அவரை முடி வெட்டுபவர் என டி என் பி சி தேர்வில் தெரிவித்து இருக்கும் தகவலால் தமிழ்நாடு முழுவதும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வு நேற்று நடைபெற்றது .
இந்த தேர்வில் லட்சக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிட்சை எழுதினார்கள். இந்த தேர்வில் ஐயா வைகுண்டசாமி பற்றிய கேள்வி ஒன்றும் இடம்பெற்று இருந்தது . இதில் அய்யா வைகுண்டசாமி குறித்த விருப்ப கேள்விகளில் ஒன்று முடி சூடும் பெருமாள் மற்றும் முத்துக்குட்டி என்று அழைக்கப்பட்டார் என குறிப்பிடப்பட்டது .
ஆனால் இதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் முடி சூடும் பெருமாள் என்பதை விஷ்ணு வித் எ கிரவுண் என்று மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக “தி காட் ஆப் ஹேர் கட்டிங்” என்று தவறாக மொழி பெயர்த்து கேள்வி கேட்டிருக்கிறார்கள் இதன் பொருள் முடி வெட்டும் தொழில் செய்யும் கடவுள் என்பதாகும் .
இது மட்டுமல்லாமல் மற்றொரு கேள்வியும் தவறாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறது . மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சரியான கூற்று எது என்ற கேள்வி கேட்டு இதற்கு பதிலாக ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து விருது பெற்றது என்பதை பிச்சை எடுத்தார்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் தற்பொழுது கண்டன குரல்கள் கிளம்பி இருக்கின்றன . அய்யா வைகுண்ட சாமி என்பவர் தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமுதாயத்தின் குலக் கடவுளாக கருதப்படுகிறார் .இவருக்கான தலைமைப் பதி கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது .
இது தவிர தமிழ்நாடு முழுக்க 2000 இடங்களில் ஐயா வைகுண்டசாமி கோவில்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கேரள மாநிலம் திருவிழா சமஸ்தானத்தால் அடக்குமுறைக்கு ஆளான நாடார் சமுதாயத்தையும் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையும் தனது ஆன்மிக போராட்டத்தால் வென்றவர் ஐயா வைகுண்டசாமி .
தற்பொழுது அனைத்து மதத்தினராலும் வழிபட்டு வரும் அவரை முடிவெட்டும் கடவுள் என்று தவறாக மொழி பெயர்த்தது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது . இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்கள்.
ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் தேர்வாணையம் தொடர்பாக மிக கவனமாக செயல்பட வேண்டும் தவறான இந்த மொழிபெயர்ப்பு மாணவர்கள் மத்தியில் அய்யா வைகுண்டசாமி பற்றி மிக மோசமான கருத்தை பதிவு செய்திருக்கும் . இது தொடர்பாக தமிழ்நாடு தேர்வாணையம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நாடார் அமைப்புகள் அனைவரும் இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற
கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *