Durai Murugan: வேலைநிறுத்தம் பிசுபிசுத்ததாக அமைச்சர் கிண்டல்!

Advertisements

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் பிசுபிசுத்ததாக அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில்கிண்டல் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் குடும்ப  அட்டை த்தாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்கும் நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது.இதில் மாநில நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றுவேலூர் மாவட்டத்தில் உள்ள4 லட்சத்து 49 ஆயிரத்து 311 பேருக்குப் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கம் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், அண்மையில் தூத்துக்குடி  திருநெல்வேலி ஆகியமாவட்டங்களில் பெய்த மழை அந்த மாவட்டங்களில் அதிக அளவுப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனைச் சரி செய்யும் பணியில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மழையின் காரணமாக அந்தப் பகுதிகளில்  750 ஏரிகளை உடைப்பு ஏற்பட்டுள்ளது.குறிப்பாகதாமிரபரணி ஆற்றில் அதிக அளவுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனையும் சரி செய்யும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது.கடந்த ஆட்சியாளர்கள் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து விட்டுச் சென்றார்கள். அதற்கு வட்டி கட்டவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. அதனையும் செலுத்தி, மேலும் மக்களுக்கான அரசின் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தமிழக அரசுக்கு நிதிச்சுமை இருந்தபோதிலும், திட்டங்களை நிறைவேற்றியும், இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளையும் தமிழக அரசு சரி செய்து வருவதாகஅமைச்சர் துரைமுருகன் கூடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்துசெய்தியாளர்கள் கேட்டதற்கு?பெரும்பாலானோர்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தப் போராட்டம் பிசுபிசுத்ததுஎன்று கூறினார்.துணைவேந்தர் நியமனகுழுவில்ஆளுநர் திரும்பப் பெற்றதுவரவேற்கதக்கது.என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *