
சென்னை: சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜின் தடம் புரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு ரெயில் பணிமனையிலிருந்து பெட்டிகளை இழுத்து சென்ற ரெயில் என்ஜின் எழும்பூர் ரெயில் நிலைய நடைமேடை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென ரெயில் என்ஜின் தடம்புரண்டது.
இதையடுத்து ஊழியர்கள் ரெயில் என்ஜினை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐதராபாத் அருகே சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் பயணிகள் காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது.
இதைபோல ஐதராபாத், நம்பள்ளி ரயில் நிலையத்தில் இன்று சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நடைமேடையில் தடம் புரண்டதில் சில பயணிகள் லேசான காயம் அடைந்தனர். சென்னை நோக்கிச் சென்ற ரயில், ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்திலிருந்து தவறி விழுந்து விபத்துக்குள்ளானது. அது பக்கவாட்டையும் தாக்கியது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஹைதராபாத் ரயில் நிலையத்தில் சென்னை எக்ஸ்பிரஸின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டதாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், சில பயணிகள் லேசான காயம் அடைந்தனர் என்று கூறப்படுகிறது.

