பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான சீமான் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ‘சேயோன்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இதில், பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மகேந்திரனுடன் இணைந்து நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் இப்படத்தை தயாரித்துள்ளது. அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தில் சீமான் இணைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.



