
காலத்தைப் போலவே கர்ப்பம் சம்பந்தப்பட்ட கட்டுக்கதைகளும் பழமையானவை. நீங்கள் இரண்டு உயிருக்காகச் சாப்பிடுகிறீர்கள் என்பதில் ஆரம்பித்து நீங்கள் எதற்காகச் சாப்பிட ஆசைப்படுகிறீர்களோ அதுவே உங்கள் குழந்தையின் எதிர்காலம் என்பது வரை பல்வேறு கட்டுக்கதைகள் உள்ளன. அதனால் இந்தப் பதிவில் கர்ப்பம் சம்பந்தப்பட்ட சில கட்டுக் கதைகளையும் அதன் பின்னணியில் உள்ள உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
நீ இரண்டு உயிர்களுக்காகச் சாப்பிடுகிறாய்:
பல கர்ப்பிணி பெண்கள் தங்களுக்காகவும், தங்களுடைய குழந்தைக்காகவும் இரண்டு மடங்காகச் சாப்பிட வேண்டும் எனப் பலரும் கூறுகின்றனர். ஆனால் இது உண்மை அல்ல.
பெரும்பாலான பெண்களுக்கு முதல் டிரைமெஸ்டரில் கூடுதல் கலோரிகள் தேவைப்படாது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டிரைமெஸ்டர்களில் ஒரு நாளைக்கு 300 கலோரிகள் கூடுதலாக இருந்தால் போதும். இது தோராயமாக ஒரு ஆப்பிளுடன் பீனட் பட்டர் அல்லது சிறிதளவு தயிர் சாப்பிடுவது போன்ற அளவாகும்.
நெஞ்செரிச்சல் ஏற்பட்டால்உன்னுடைய குழந்தைக்கு நிறைய தலைமுடி இருக்கும்:
கர்ப்பத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக உங்களுடைய குழந்தை வயிற்றை தள்ளும்பொழுது நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.
ஆனால் இது குழந்தையின் தலைமுடி வளர்ச்சிக்கான எந்த ஒரு அறிகுறியும் கிடையாது. வயிறு மற்றும் உணவுக் குழாய்க்கு இடையே புரோஜஸ்டரான் ஹார்மோன் இருப்பதன் காரணமாகவே இந்த நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
நீ மிகவும் சோர்வாக இருந்தால் உனக்குப் பெண் குழந்தையாகத் தான் இருக்கும்:
காலை நேரத்தில் வாந்தி, குமட்டல் ஏற்படுவதன் காரணமாக ஒரு குழந்தையின் பாலினத்தை நம்மால் கூறி விட முடியாது. இதற்கு எந்த ஒரு அறிவியல்பூர்வமான ஆதாரமும் கிடையாது.
உங்களுக்கு எவ்வளவு வாந்தி, குமட்டல் ஏற்படுகிறது என்பதை வைத்து உங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஒருபோதும் தீர்மானிக்க இயலாது.
கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்:
கர்ப்பத்தின்போது மிதமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது கர்ப்ப காலத்தில் ஏற்படும் டயாபடீஸ் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைப்பதோடு கர்ப்பிணி பெண்களின் மனநிலையை மேம்படுத்தி அவர்களுக்கு நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.
எனினும் தீவிரமான உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். அது மட்டுமல்லாமல் எந்த ஒரு உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன்பும் மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது நல்லது.
உங்களுக்குக் கர்ப்பத்திற்கான பொலிவு இருந்தால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்:
கர்ப்பத்தின்போது பல பெண்களுக்கு அவர்களுடைய சருமம் மினுமினுப்பாகவும், பார்ப்பதற்கே அழகாகவும் இருக்கும். கர்ப்பத்தின்போது ஏற்படும் இந்தச் சரும மாற்றத்திற்கு காரணம் ஹார்மோன்களில் ஏற்பட்டும் மாற்றமாகும். இதற்கும் ஆரோக்கியத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.
கர்ப்ப காலத்தில் கட்டுப்படுத்த இயலாத உணவுக்கான ஆசைகள் ஏற்படும்:
கர்ப்பத்தின்போது உணவுக்கான ஆசைகள் ஏற்படுவது உண்மைதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல அது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாக இருக்காது. பல பெண்களுக்குப் பழங்கள் முதல் உப்பு நிறைந்த தின்பண்டங்கள், மசாலா பொருட்கள்வரை சாப்பிடுவதற்கான ஆசை ஏற்படலாம்.
கர்ப்ப காலத்தில் உங்களால் உடலுறவு கொள்ள முடியாது:
உங்களுக்குக் குறிப்பிட்ட சில பிரக்னன்சி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாத வரை நிச்சயமாக நீங்கள் வழக்கம்போல உடலுறவில் ஈடுபடலாம். இதற்கு நீங்கள் உங்களுடைய மகப்பேறு நிபுணரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.



