மீண்டும் ஒரு கரூர் சம்பவம் நடக்க முதலமைச்சர் முயற்சித்தார்’ – ஆதவ் குற்றச்சாட்டு.!

கரூர் போன்று கொளத்தூரில் மற்றொரு சம்பவம் நடைபெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சித்தார் என தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனியார் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, செந்தில் பாலாஜி கரூரில் நிற்க பயந்து கோவையில் நிற்கிறார் என்றும் கரூரில் 41 பேர் இறந்ததற்கு காரணம் செந்தில் பாலாஜி என்றும் குற்றம் சாட்டினார். கரூர் போன்று கொளத்தூரில் மற்றொரு சம்பவம் நடைபெற முதலமைச்சர் நினைத்திருந்ததாகக் கூறினார். காவல்துறை முதல்வர் பேச்சைக்கேட்டு செயல்படுகிறது என்றும் கொளத்தூரில் அவருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தார். நாங்கள் பரப்புரை செய்யும் பொது மீண்டும் கரூர் சம்பவம் போன்று இங்கு நடைபெறக்கூடாது என தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *