குடிபோதையில் அரசுப்பேருந்தை இயக்கிய மெக்கானிக்!

Advertisements

சென்னை: 

அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலகம் எதிரில் அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனை உள்ளது. அதில் குணசேகரன் (50) என்பவர் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வருகிறார். ஒழுங்கீனம் காரணமாகக் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இவருக்கு மீண்டும் பணி வழங்கப்படவில்லையெனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு முறை அடையாறு துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள அடையாறு காவல் நிலையம் வந்த குணசேகரன் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த காவலர்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் டெப்போவுக்குள் சென்று அங்கும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அடையாறிலிருந்து மேற்கு தாம்பரம் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து அதிவேகமாக இயக்கி, அடையாறு காவல் துணை ஆணையர் அலுவலக காம்பவுண்ட் சுவரில் மோதியுள்ளார்.

இதில், காம்பவுண்ட் சுவர் மற்றும் அருகில் இருந்த வாகனங்கள் சேதமடைந்தன. அளவுக்கு அதிகமான மதுபோதையில் குணசேகரன் இதுபோல் செய்ததாகக் கூறப்படுகிறது. போதை தெளிந்தவுடன் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அடையாறு போலீசார் தெரிவித்துள்ளனர். பணிமனை இளநிலை பொறியாளர் கிளமெண்ட், இது தொடர்பாகக் குணசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையிலும் புகார் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *